விருதுநகர் : விருதுநகரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டில்லி விவசாயிகள் போராட்டத்தின்போதுசுப்கரன் சிங் கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., தொழிற்சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் சமுத்திரம், சி.ஐ.டி.யு., தேவா முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், நகரச் செயலாளர் முத்துக்குமார், மார்க்சிஸ்ட் நகரச்செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.