/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மதுரை -- கோவை, ராமேஸ்வரம் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வலியுறுத்தல் மதுரை -- கோவை, ராமேஸ்வரம் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வலியுறுத்தல்
மதுரை -- கோவை, ராமேஸ்வரம் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வலியுறுத்தல்
மதுரை -- கோவை, ராமேஸ்வரம் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வலியுறுத்தல்
மதுரை -- கோவை, ராமேஸ்வரம் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வலியுறுத்தல்
ADDED : செப் 04, 2025 03:57 AM
சிவகாசி: மதுரை - -கோவை, மதுரை -- ராமேஸ்வரம் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என மதுரை கோட்ட மேலாளரிடம், திருத்தங்கல் விவேகானந்தர் வர்த்தக சங்கத்தின் கோரிக்கை விடுத்தனர்
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா நேற்று காலை சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு செய்தார். அவரிடம் திருத்தங்கல் விவேகானந்தர் வர்த்தக சங்கத்தினர் அளித்த மனு: திருத்தங்கலில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் வருவாய் அடிப்படையில் மதுரை கோட்டத்தில் 24 வது இடத்தில் உள்ளது.
சென்னை - கொல்லம், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி, திருநெல்வேலி மேட்டுப்பாளையம், தாம்பரம் - திருவனந்தபுரம் ரயில்கள் திருத்தங்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை-- கோவை, மதுரை- - ராமேசுவரம் ரயில்களை செங்கோட்டை வரையும், கொல்லம் -- புனலுார் மெமு ரயிலை மதுரை வரையும், குருவாயூர் -- மதுரை ரயிலை ராமேஸ்வரம் வரையும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.