/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி பயன்படுத்தி விநியோகிப்பதால் தாமதம் ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி பயன்படுத்தி விநியோகிப்பதால் தாமதம்
ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி பயன்படுத்தி விநியோகிப்பதால் தாமதம்
ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி பயன்படுத்தி விநியோகிப்பதால் தாமதம்
ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி பயன்படுத்தி விநியோகிப்பதால் தாமதம்
ADDED : ஜூன் 13, 2025 02:38 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரேஷன் கடைகளில் பொருட்களை கருவிழி பதிவு கருவியை பயன்படுத்தி விநியோகம் செய்வதால் தாமதம் ஏற்படுவதால் கார்டுதாரர்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க அரசு பலவித நவீன யுக்திகளை பயன்படுத்தி வருகிறது. புதிய பி.ஓ.எஸ்., கருவியுடன் மின்னணு எடை தராசை இணைத்தும், கார்டுதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்தும் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சில நேரங்களில் விரல் ரேகை பதிவை கருவி ஏற்றுக் கொள்ளாததால் பொருட்கள் வழங்குவதில் சிரமமும், தாமதமும் ஏற்பட்டது.
இதனால் கார்டுதாரர்களுக்கும், கடைகாரர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. பின் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி அதில் உள்ள க்யூ.ஆர்., கோட்டை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் முறை கொண்டுவரப்பட்டது.
இதிலும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அதிக வசதிகள் கொண்ட பி.ஓ.எஸ்., கருவி வழங்க முடிவு செய்யப்பட்டது. புதிய பி.ஓ.எஸ்., கருவியுடன் கார்டுதாரர்களின் கருவிழி பதிவு கருவியும் இணைக்கப்பட்டது. இதன் மூலம் சரியான எடையில் பொருட்கள் வழங்குவது உறுதி செய்யப்படும் எனவும் எந்தவித முறைகேடுகளும் ஏற்படாது என கூட்டுறவு அதிகாரிகள் கூறினர்.
அருப்புக்கோட்டையில் 20க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் புதியதாக கருவிழி கருவி இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு கார்டுதாரருக்கும் கருவிழி கருவியை பயன்படுத்தி பொருட்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் ஒரு நாளைக்கு 30 முதல் 40 பேருக்கு தான் பொருட்கள் வழங்க முடிகிறது. இதனால் வரிசையில் காத்திருக்கும் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பெரும்பாலும் வயதானவர்கள் தான் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருகின்றனர். பொருட்கள் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். பொருட்களை தாமதம் இன்றி விரைவில் வாங்கிச் செல்ல உரிய நடவடிக்கைகளை பொது விநியோகத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.