ADDED : பிப் 12, 2024 04:25 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே மீசலுாரைச் சேர்ந்தவர் லட்சுமணன் 60. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பாலட்சுமியின் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அந்த நிலத்தில் 2 ஏக்கரில் மக்காச்சோளம், 2 ஏக்கரில் சோளமும் பயிரிட்டுள்ளார்.
பிப். 8 மதியம் 2:00 மணி வயலில் தீப்பற்றி எரிவதை அறிந்து சென்று பார்த்தார். 2 ஏக்கர் மக்காச்சோளம், ஒன்றரை ஏக்கர் சோள நாற்றும் எரிந்து கருகி விட்டது தெரிந்தது. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.