/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்; முன் ஜாமின் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்; முன் ஜாமின் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்; முன் ஜாமின் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்; முன் ஜாமின் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்; முன் ஜாமின் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 17, 2025 12:51 AM
ஸ்ரீவில்லிபுத்துார் ; விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கும் பட்சத்தில் ஆலை உரிமையாளர் ராஜா சந்திரசேகரின் முன்ஜாமின் மனுவை அனுமதித்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜூன் 11ல் காரியாபட்டி வடகரையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கருப்பையா, சவுண்டம்மாள், கணேசன், பேச்சியம்மாள் உயிரிழந்தனர். முருகன், காமாட்சி காயமடைந்தனர். இச்சம்பவத்தில் ஆலை உரிமையாளர் ராஜா சந்திரசேகர், மேலாளர் முருகன், போர்மேன் வீரசேகரன் மீது காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முன்ஜாமீன் கோரி ராஜா சந்திரசேகர், ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், பெருங்காயமடைந்தவருக்கு ரூ.5 லட்சம், லேசான காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கும் பட்சத்தில், ஜாமின் மனுவை அனுமதித்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்திரவிட்டார்.