/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கோடையிலும் குளுமை... பொதுநலத்தால் சாத்தியம்... பசுமை வளர்க்கும் இளைஞர் கூட்டம் கோடையிலும் குளுமை... பொதுநலத்தால் சாத்தியம்... பசுமை வளர்க்கும் இளைஞர் கூட்டம்
கோடையிலும் குளுமை... பொதுநலத்தால் சாத்தியம்... பசுமை வளர்க்கும் இளைஞர் கூட்டம்
கோடையிலும் குளுமை... பொதுநலத்தால் சாத்தியம்... பசுமை வளர்க்கும் இளைஞர் கூட்டம்
கோடையிலும் குளுமை... பொதுநலத்தால் சாத்தியம்... பசுமை வளர்க்கும் இளைஞர் கூட்டம்

உதவியால் சாத்தியமானது
கார்த்திக், தனியார் நிறுவன ஊழியர்: பசுமை இயக்கம், தடம் அமைப்பு என பல்வேறு அறக்கட்டளைகள் மரம் வளர்ப்பதற்கு உதவிகள் புரிந்தனர். தொழிலதிபர்கள் பலர் தன்னார்வமாக அளித்த நிதி உதவி மூலம் தரமான மரக்கன்றுகள் மற்றும் குரோட்டன்ஸ் செடிகள் வாங்கி சாலை ஓரத்தில் நட்டு பராமரித்து வருகிறோம். அக்னி நட்சத்திரம் வந்த போதும் இந்தக் கோடையிலும் அண்ணாநகர் பகுதியில் குளுமையான சூழல் நிலவுகிறது.
ஆர்வம் அதிகரிக்கும்
தீனா, தடம் அமைப்பு உறுப்பினர்: ஒவ்வொரு பகுதியிலும் இளைஞர்கள் ஒன்றாக இணைந்து மரம் வளர்ப்பில் ஈடுபட்டால் வருங்கால மாணவர்களுக்கும் மரம் வளர்ப்பில் ஆர்வம் ஏற்படும்.வைப்பாற்றில் 50 பனை மர விதைகளை தடம் அமைப்பின் மூலம் தயார் செய்து மாணவர்கள் மூலம் நடவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். மரியன் ஊரணியில் மலர் செடி, மரக்கன்று நடப்பட்டுள்ளது. தற்போது தடம் அமைப்பு மூலம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் காலியாக உள்ள இடங்களில் மரம் வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.