Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தொடருது..: மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள்: குடும்ப தகராறு காரணமாக இருப்பது அதிகரிப்பு

தொடருது..: மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள்: குடும்ப தகராறு காரணமாக இருப்பது அதிகரிப்பு

தொடருது..: மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள்: குடும்ப தகராறு காரணமாக இருப்பது அதிகரிப்பு

தொடருது..: மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள்: குடும்ப தகராறு காரணமாக இருப்பது அதிகரிப்பு

ADDED : மார் 13, 2025 04:25 AM


Google News
விருதுநகர்: மாவட்டத்தில் குடும்ப தகராறு, முன்விரோதம் காரணமாக பிப்ரவரி, மார்ச் இதுவரை 6 கொலைகள் நடந்துள்ளது. இந்த அசம்பாவிதங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும் கொலைகள் அடுத்தடுத்து நடப்பதால் மக்களிடையே அச்சம் உணர்வு அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாராணாபுரம் ரோடு முருகன் காலனியைச் சேர்ந்த ராஜலட்சுமி 27, குடும்ப தகராறு காரணமாக கணவர் திருமலைக்குமாரால் பிப். 13ல் கொலை செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிப்புத்துாரில் பாரில் மது குடிக்க வந்த மாயன் 27, பிப். 18ல் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பார் உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்த முனீஸ்வரியை 35, குடும்ப தகராறு காரணமாக கணவர் பொன்னுச்சாமி 40, மார்ச் 5ல் கொலை செய்தார். மேலும் மனைவியின் உடலில் தீ வைத்த போது கணவருக்கும் நெருப்பு பரவி அவரும் பலியானார்.

சிவகாசி சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி 30, கள்ளக்காதல் தகராறில் மார்ச் 9ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியைச் சேர்ந்த நவநீதன் மனைவி சரஸ்வதி 75. இவரது பேரன் ஸ்ரீதர் 22, மது போதையில் பாட்டியிடம் தகராறு செய்து சரஸ்வதி தலையில் கல்லை போட்டு மார்ச். 10ல் கொலை செய்தார்.

காரியாபட்டி அருகே தார் குடோனில் முன்னாள் ராணுவ வீரர் துரைப்பாண்டி 62. இவரை தாரில் நேற்று மூழ்கடித்த நண்பர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். இது போன்று மாவட்டத்தில் குடும்ப தகராறு, முன்விரோதம் காரணமாக தொடர்ந்து அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது.

இச்சம்பவங்கள் பெரும்பாலும் மது போதையில் இருக்கும் போது நடந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. கொலைக்கு காரணமாக இருப்பவர்கள் கைது செய்யப்பட்டாலும் நடப்பதை தடுக்க முடியாத நிலையே தொடர்கிறது.

இது போன்ற சம்பவங்களில் உணர்ச்சி வசப்பட்டு செய்து விட்டு வாழ்கையை இழப்பவர்களே ஏராளம். இரண்டு, மூன்று மாதங்களுக்குள் 5 கொலைகளுக்கு குறையாமல் நடப்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

கொலைகள் நடப்பதை தடுக்க முடியாவிட்டாலும் மக்களிடையே எந்த பிரச்னைக்கும் கொலை தீர்வாகாது என்பதை உணர்த்தும் படியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

எனவே மாவட்ட நிர்வாகம், போலீஸ் நிர்வாகமும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us