ADDED : செப் 08, 2025 06:08 AM
காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்தார். மல்லாங்கிணர் பேரூராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ. 2 கோடியே 30லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட 40 குடியிருப்புகளில் பணிகளின் தரம், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். ஜோகில்பட்டியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரோட்டோரம் நடப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டார்.
தாசில்தார் மாரீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.