ADDED : மே 31, 2025 12:24 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள் தலைமை வகித்தார். தாளாளர் விஜயகுமார், பொருளாளர் டாக்டர் பால்சாமி முன்னிலை வகித்தனர். முதல்வர் மனோஜ் குமார் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் பங்கேற்று, மாணவர்கள் உயர் கல்வியை தேர்வு செய்யும் விதம், அலைபேசி மற்றும் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துதல் என்பதுகுறித்து பேசினார். மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள், ரங்கராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். முதல்வர்ராஜேஸ்வரி நன்றிகூறினார்.