/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மத்திய அரசு என்.சி.சி.,யில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தல் மதுரை என்.சி.சி., கமாண்டர் பேட்டி மத்திய அரசு என்.சி.சி.,யில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தல் மதுரை என்.சி.சி., கமாண்டர் பேட்டி
மத்திய அரசு என்.சி.சி.,யில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தல் மதுரை என்.சி.சி., கமாண்டர் பேட்டி
மத்திய அரசு என்.சி.சி.,யில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தல் மதுரை என்.சி.சி., கமாண்டர் பேட்டி
மத்திய அரசு என்.சி.சி.,யில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தல் மதுரை என்.சி.சி., கமாண்டர் பேட்டி
ADDED : மே 27, 2025 12:35 AM
விருதுநகர்: என்.சி.சி.,யில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது', என விருதுநகரில் மதுரை என்.சி.சி., கமாண்டர் சவுகான் தெரிவித்தார்.
விருதுநகரில் ள ராணுவ கேண்டீனில் புதுப்பிக்கப்பட்ட ஏ.சி., வாடிக்கையாளர் காத்திருப்பு அறை, கேண்டீன் திறந்து வைத்த மதுரை என்.சி.சி., கமாண்டர் சவுகான் கூறியதாவது:
விருதுநகரில் உள்ள ராணுவ கேண்டீன் மூலம் 3 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். மதுரை தலைமையகத்தின் கீழ் உள்ள 11 பட்டாலியன்களில் 26 ஆயிரம் என்.சி.சி., மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 2400 மாணவர்கள் உள்ளனர். மத்திய அரசு என்.சி.சி., பிரிவுகளில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது.
இதனால் என்.சி.சி.,யில் ஒவ்வொரு கட்டமாக விரிவாக்கப்பணிகள் துவங்கப்படவுள்ளது. விருதுநகரில் உள்ள 28வது பட்டாலியனில் கூடுதலாக என்.சி.சி., மாணவர்களை சேர்க்கும் திட்டம் 2ம் கட்டத்தில் விரிவுப்படுத்தப்படவுள்ளது, என்றார்.