/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சாலை அமைக்க கால்வாய் ஆக்கிரமிப்பு விளைநிலங்களில் தண்ணீர் புகும் அபாயம் சாலை அமைக்க கால்வாய் ஆக்கிரமிப்பு விளைநிலங்களில் தண்ணீர் புகும் அபாயம்
சாலை அமைக்க கால்வாய் ஆக்கிரமிப்பு விளைநிலங்களில் தண்ணீர் புகும் அபாயம்
சாலை அமைக்க கால்வாய் ஆக்கிரமிப்பு விளைநிலங்களில் தண்ணீர் புகும் அபாயம்
சாலை அமைக்க கால்வாய் ஆக்கிரமிப்பு விளைநிலங்களில் தண்ணீர் புகும் அபாயம்
ADDED : மே 22, 2025 12:26 AM

சேத்துார்: சேர்த்துார் அருகே மேட்டுப்பட்டியில் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் நீர் வரத்து நேரங்களில் விளைநிலங்களிலும் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
சேத்துார் பேரூராட்சி மேட்டுப்பட்டி கடப்பாகுடி கண்மாய் சுற்றி 100க்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கண்மாய்க்கு வாழ வந்தான் குளம், நடுவக்குளம் வழியாக தண்ணீர் வருவதற்கான நீர்வரத்து கால்வாய் ராஜபாளையம் மெயின் ரோடு வரை அமைந்துள்ளது.
இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு கால்வாயில் மையப் பகுதியில் தடுப்பு சுவர் அமைத்து பணிகள் தொடங்கியது. இதனால் 20 அடி அகலம் இருந்த கால்வாய் தற்போது 5 அடி ஆக குறைந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே நீர்வரத்து அதிகம் உள்ள நேரங்களில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டு வரும் சூழலில் சாலை பணிகளுக்காக கால்வாயை ஆக்கிரமிப்பதால் இப் பிரச்சனை மேலும் அதிகரிக்கும் என குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நீர்வள ஆதார துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.