தற்காலிக ஆசிரியர் பணிக்கு அழைப்பு
தற்காலிக ஆசிரியர் பணிக்கு அழைப்பு
தற்காலிக ஆசிரியர் பணிக்கு அழைப்பு
ADDED : ஜூன் 28, 2025 12:12 AM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு:
சுந்தரராஜபுரம், கோட்டையூர் ஆதிதிராவிடர் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிபணியிடத்திற்கு தகுதியான நபர்கள் ஜூன் 30க்குள் விண்ணபிக்கலாம்.
காலியாகவுள்ள ஒரு வேதியியல் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 18 ஆயிரம் என்ற மாத தொகுப்பூதியத்தில், கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 15 ஆயிரம் என்ற மாத தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியரை நியமிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிட ஆசிரியர் தேர்வு வாரியம் பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வியாண்டில் எது முன்னரோ அது வரையில் பணியமர்த்தப்படுவர். பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்படும் வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளில் உள்ளவாறு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும், என்றார்.