ADDED : ஜூன் 27, 2025 12:34 AM
சாத்துார்: சாத்துார் என்.மேட்டுப்பட்டியை சேர்ந்த வெங்கடலட்சுமி 30. திருமணம் ஆனவர். சில நாட்களுக்கு முன் வீட்டில் சமையலறையை தின்னர் கொண்டு சுத்தம் செய்த போது இவர் உடலில் தீக்காயம் அடைந்தார்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.