ராஜபாளையம்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு இரத்ததான நிகழ்ச்சி நடந்தது.
மகப்பேறு மருத்துவமனையில் அமைப்பின் மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமை வகித்தார். கலை இலக்கிய பெருமன்ற செயலாளர் டாக்டர் அறம் துவக்கி வைத்தார். முன்னாள் எம்.பி., லிங்கம், எம்.எல்.ஏ., ராமசாமி, மாப்பிள்ளை விநாயகர் மன்ற தலைவர் ராமராஜ், கண்மணி காதர், இ.கம்யூ., நகர் தலைவர் விஜயன் வாழ்த்து பேசினர். 50 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.