ADDED : செப் 20, 2025 03:39 AM
விருதுநகர்: விருதுநகர் பா.ஜ., அலுவலகத்தில் பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார்.
மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி பொறுப்பாளர் நகரத் தலைவர் மணிராஜன் ஒருங்கிணைத்தனர். 75 பேர் ரத்த தானம் வழங்கினர்.