ADDED : செப் 22, 2025 03:20 AM
சிவகாசி : சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் துாய்மை பாரதம் நிகழ்ச்சியாக தெற்கு ஒன்றியம் பா.ஜ., சார்பில் துப்புரவு பணி நடந்தது.
மருத்துவமனையில் குப்பைகள் அகற்றப்பட்டு துாய்மை பணி நடந்தது. வழக்கறிஞர் பிரபாகரன், மகளிர் அணி முன்னாள் தலைவர் சந்தன குமாரி, மாநில செயற்குழு உறுப்பினர் முத்துலட்சுமி துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.