ADDED : ஜூன் 07, 2025 01:01 AM
காரியாபட்டி: காரியாபட்டி முக்கு ரோடு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
காரியாபட்டி முக்கு ரோடு மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கல்யாண கணபதி, மாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு பெண்கள் கும்மியடித்து, பூஜை செய்து வருகின்றனர். முக்கிய நிகழ்வாக நேற்று பாலாபிஷேகம் நடந்தது. கோயிலில் இருந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். உற்ஸவ மாரியம்மனை தேரில் வைத்து நகரின் முக்கிய வீதி வழியாக வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.