ADDED : அக் 18, 2025 03:37 AM
நரிக்குடி: திருச்சுழி அரசு கலை அறிவியல் கல்லூரியில், பாதுகாப்பான தீபாவளியை மாணவர்கள் கொண்டாட வேண்டும் என திருச்சுழி தீயணைப்பு நிலைய தீ தடுப்பு குழுவினர் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.
மாணவர்கள் பட்டாசுகளை எவ்வாறு வெடிப்பது, சிலிண்டரில் தீ பற்றும் போது அதனை எவ்வாறு அணைப்பது, மழைக்கால பாதிப்பு தடுப்பு முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். முதல்வர் தேவிசந்திரா, மாவட்ட தீ தடுப்பு உதவி அலுவலர் தாமோதரன், நிலைய அலுவலர் சந்திரசேகரன், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., பேராசிரியர் கணேசன் செய்திருந்தார்.


