ADDED : பிப் 11, 2024 12:35 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசீலன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இளங்கோ, பாஸ்கரன், குமரவேல், ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பூர்ண லதா,செண்பகவல்லி பங்கேற்றனர்.
300க்கும் மேற்பட்ட போலீசார், போக்குவரத்து துறை அலுவலர்கள், மக்கள் ஹெல்மெட் அணிந்து நகரின் பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நான்கு சக்கர வாகனங்களில் சிவப்பு பிரதிபலிப்பான் பட்டைகள் ஒட்டப்பட்டது.