ADDED : ஜன 13, 2024 05:11 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சைபர் கிளப் மாணவர்கள், போக்குவரத்து காவல்துறை சார்பில் இணையதள |குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
முதல்வர் சுந்தர மகாலிங்கம் தலைமை வகித்தார். டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தர்மராஜ் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பங்கேற்ற மாணவர்களை தாளாளர் வெங்கடாசலபதி, பள்ளி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், துணை முதல்வர் முகமது முகைதீன் பாராட்டினர்.