ADDED : செப் 04, 2025 03:54 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பாரதி பவுண்டேஷன், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம், தளவாய்புரம் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் சார்பில் கதர் கிராம தொழில்கள், குப்பைகள் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பாரதி பவுண்டேஷன் நிறுவனர் சாந்தி வரவேற்றார். கதர் வாரிய உதவி இயக்குனர் செந்தில்குமார் , பார்ட்னர்ஸ் இன் சேஞ்ச் அமைப்பின் சார்பில் பொன்னுச்சாமி, உட்பட பலர் பேசினர்.
ஏற்பாடுகளை பாரதி பவுண்டேஷன், தளவாய்புரம் மகளிர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் குழும ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர்.