ADDED : ஜன 28, 2024 06:31 AM
விருதுநகர், : வத்திராயிருப்பு வேளாண் விரிவாக்க மையத்தில் தென்னை பயிர் சாகுபடி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் சங்கீதா தலைமை வகித்தார். தென்னை பயிரில் நோய் தாக்குதலான குருத்தழுகல், இலை கருகல், சாம்பல் இலைப்புள்ளி, அடித்தண்டழுகல், சாறுவடிதல் நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி ஸ்ரீவில்லிபுத்துார் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் விமலா பேசினார்.
பூச்சி தாக்குதலான காண்டாமிருகவண்டு, சிவப்பு கூன் வண்டு, கருத்தலைப்புழு, ரூக்கோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், வெண்புழு, கரையான் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி இணை பேராசிரியர் விஜயராகவன், பேசினார். உதவி தோட்டக்கலை அலவலர்கள் அருள்பாண்டியன், சிவா ஏற்பாடுகளை செய்தனர்.