/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பி.எஸ்.ஆர்., கல்லுாரி மாணவருக்கு விருது பி.எஸ்.ஆர்., கல்லுாரி மாணவருக்கு விருது
பி.எஸ்.ஆர்., கல்லுாரி மாணவருக்கு விருது
பி.எஸ்.ஆர்., கல்லுாரி மாணவருக்கு விருது
பி.எஸ்.ஆர்., கல்லுாரி மாணவருக்கு விருது
ADDED : ஜூன் 01, 2025 10:56 PM

சிவகாசி:சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர் ரமேஷுக்கு செயற்கை நுண்ணறிவு மருத்துவதுறையில் சிறந்த ஸ்டார்ட் அப் விருது வழங்கப்பட்டுள்ளது.
ரமேஷ் அமெரிக்காவில் ஜென் ஏ.ஐ., ஹெல்த் கேர் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் மருத்துவ புள்ளி விபரங்களை பயன்படுத்தி நோய்களை துல்லியமாக கண்டறியும் எளிய ஏ.ஐ., மாடல்களை உருவாக்கி உள்ளார். மேலும் செயற்கை நுண்ணறிவு மூலம் நோய்களை எளிதில் கண்டறியும் அலைபேசி செயலிகளை உருவாக்கி கிராமப்புற மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறார்.
ஜார்ஜியா டெக்னாலஜி மாநாட்டில் அமெரிக்கா, கனடா நாடுகளின் 2024-ம் ஆண்டுக்கான மருத்துவதுறையில் சிறந்த கண்டுபிடிப்புக்கான ஸ்டார்ட் அப் விருது ரமேஷுக்கு வழங்கப்பட்டது.
பி.எஸ்.ஆர் கல்லுாரி தாளாளர் சோலைசாமி கூறுகையில், எங்கள் கல்லுாரியில் பயின்ற மாணவர்கள் உலகளவில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோராகவும், தொழில் முனைவோராகவும் இருந்து கல்லுாரிக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கின்றனர் என்றார்.
ரமேைஷ கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஷ்வரி, முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி, பேராசிரியர்கள் வாழ்த்தினர்.