/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ துணை மருத்துவ படிப்புகளுக்கு கட்டுப்பாட்டு அறையில் ஏற்பாடு துணை மருத்துவ படிப்புகளுக்கு கட்டுப்பாட்டு அறையில் ஏற்பாடு
துணை மருத்துவ படிப்புகளுக்கு கட்டுப்பாட்டு அறையில் ஏற்பாடு
துணை மருத்துவ படிப்புகளுக்கு கட்டுப்பாட்டு அறையில் ஏற்பாடு
துணை மருத்துவ படிப்புகளுக்கு கட்டுப்பாட்டு அறையில் ஏற்பாடு
ADDED : ஜூன் 19, 2025 11:56 PM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
மாவட்டம் நிர்வாகம் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்வதற்கு நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளுக்கு இலவசமாக கல்வி உதவி மைய கட்டுப்பாட்டு அறை வல்லுனர்கள் மூலம் விண்ணப்பித்து வழிகாட்டப்பட்டு வருகிறது.
தற்போது விருதுநகர் மாவட்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நர்சிங், துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு உதவுவதற்காக மாவட்ட கல்வி கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த கல்வி கட்டுப்பாட்டு அறையை மாணவர்கள் நேரிலோ அல்லது 99769 03873 ,95663 89092 என்ற தொலைபேசி மூலமாக தகவல்களை கேட்டு பயன்பெறலாம். இப்படிப்புகளுக்கான விண்ணப்பம் துவங்கும் நாள் ஜூன் 17, இறுதி நாள் ஜூலை 7 ஆகும். எனவே மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.