ADDED : ஜூன் 08, 2025 06:23 AM
சேத்துார் : சேத்தூர் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் சார்பில் பிளாரன்ஸ் ரைட்டிங்கேல் விருது பெற்ற செவிலியர் அலமேலு மங்கையர்க்கரசிக்கு பாராட்டு விழா நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் அலமேலு மங்கையர்கரசிக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான பிளாரன்ஸ் ரைட்டிங்கேல் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
விருது பெற்றமைக்காக கோயில் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார் தலைமை வகித்தார். செயல் அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். தமிழ் பேராசிரியை சத்யா நன்றி கூறினார்.