ADDED : மே 23, 2025 12:07 AM
சிவகாசி: சிவகாசி அருகே மாரனேரி ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேசப் பள்ளியில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு, பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்வி குழுமம் தலைவர் ராஜு தலைமை வகித்து மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். செயலாளர் பிருந்தா, பள்ளி முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு கைகடிகாரம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் முத்துக்குமார், ஆசிரியர்கள் செய்தனர்.