/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசு கலை கல்லுாரியில் சேர மே 27 வரை விண்ணப்பிக்கலாம் அரசு கலை கல்லுாரியில் சேர மே 27 வரை விண்ணப்பிக்கலாம்
அரசு கலை கல்லுாரியில் சேர மே 27 வரை விண்ணப்பிக்கலாம்
அரசு கலை கல்லுாரியில் சேர மே 27 வரை விண்ணப்பிக்கலாம்
அரசு கலை கல்லுாரியில் சேர மே 27 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 11, 2025 05:18 AM
விருதுநகர் : -விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர இணையதளம் மூலம் மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, சாத்துார், அருப்புக்கோட்டை, திருச்சுழியில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இங்கு இளங்கலை பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசின் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்தவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்து பட்டம் பெற முன் வரவேண்டும். பெற்றோர், உறவினர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற விருப்பமுள்ள மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் மே 27 வரை விண்ணப்பித்து உயர்கல்வி சேர்க்கை பெறலாம், என்றார்.