/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் விசாரணை நீதிமன்றம் மாற்றம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் விசாரணை நீதிமன்றம் மாற்றம்
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் விசாரணை நீதிமன்றம் மாற்றம்
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் விசாரணை நீதிமன்றம் மாற்றம்
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் விசாரணை நீதிமன்றம் மாற்றம்
ADDED : ஜூன் 06, 2025 02:21 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணை இதுவரை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்கள் , தலைமை குற்றவியல் நீதிமன்றங்களில் நடந்து வந்த நிலையில் தற்போது அவற்றின் விசாரணை அதிகாரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லஞ்சம் வாங்கி பிடிபடும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீதான வழக்குகளும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் மீதான வழக்குகளும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை,சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, விழுப்புரம் நகரங்களில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களிலும் மற்ற 30 மாவட்டங்களில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றங்களிலும் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் 2024 ஜூலை 1 முதல் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால், மேற்கண்ட நீதிமன்றங்களின் விசாரணை அதிகாரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து, அதற்கான வழிமுறைகள் குறித்து, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.