Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அனைத்து அரசு பஸ்களிலும் அறிவிப்பு ஒலிப்பான் தேவை

அனைத்து அரசு பஸ்களிலும் அறிவிப்பு ஒலிப்பான் தேவை

அனைத்து அரசு பஸ்களிலும் அறிவிப்பு ஒலிப்பான் தேவை

அனைத்து அரசு பஸ்களிலும் அறிவிப்பு ஒலிப்பான் தேவை

ADDED : ஜூன் 02, 2025 12:30 AM


Google News
விருதுநகர்: மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் மொத்தம் 462 பஸ்கள் உள்ளது. இவற்றில் வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418 ஆக உள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 2.01 லட்சம் பயணிகளும், மாதத்திற்கு 60. 30 லட்சம் பயணிகள் பயன் பெறும் வகையில் வழித்தட சேவைகளில் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இவற்றில் சில பஸ்களில் தானியங்கி பஸ் நிறுத்த அறிவிப்பு ஒலிப்பான் பயன்பாட்டில் உள்ளது. இதனால் வெளியூர் பயணிகள் எவ்வித சிரமமின்றி தங்கள் பஸ் நிறுத்தம் வந்ததும் இறங்கி செல்கின்றனர். ஆனால் இந்த அமைப்பை அனைத்து அரசு பஸ்களிலும் அமைத்து விரிவுப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள், அரசு போட்டித் தேர்வு எழுத செல்பவர்கள், புதிதாக பணிக்கு சென்று வருபவர்கள் உள்பட பல்வேறு தரப்பிலான பயணிகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். வழி தவறி வேறு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இறங்குவது தடுக்கப்படும். எனவே அனைத்து அரசு பஸ்களிலும் தானியங்கி பஸ் நிறுத்தம் அறிவிப்பு ஒலிப்பானை பயன்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us