/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரியாபட்டி சொக்கனேந்தலில் 6 மாதமாக பயன்பாட்டிற்கு வராத ஆழ்துளை கிணறு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு காரியாபட்டி சொக்கனேந்தலில் 6 மாதமாக பயன்பாட்டிற்கு வராத ஆழ்துளை கிணறு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
காரியாபட்டி சொக்கனேந்தலில் 6 மாதமாக பயன்பாட்டிற்கு வராத ஆழ்துளை கிணறு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
காரியாபட்டி சொக்கனேந்தலில் 6 மாதமாக பயன்பாட்டிற்கு வராத ஆழ்துளை கிணறு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
காரியாபட்டி சொக்கனேந்தலில் 6 மாதமாக பயன்பாட்டிற்கு வராத ஆழ்துளை கிணறு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 06, 2025 02:24 AM

காரியாபட்டி: காரியாபட்டி சொக்கனேந்தலில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு 6 மாதமாகியும் பயன்பாட்டிற்கு வராததால் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காரியாபட்டி சொக்கனேந்தலில் குடிநீர் சப்ளை செய்ய உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது. போதிய அளவில் சப்ளை இல்லாமல் அடிக்கடி குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதில் மோட்டார் பழுது, மின்தடை உள்ளிட்ட காரணங்களால் அவ்வப்போது குடிநீர் சப்ளை செய்ய முடியாமல் போவதால் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதையடுத்து கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரூ. 3.20லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, 6 மாதம் ஆகியும் இதுவரை குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை.
இதனால் தொடர்ந்து அக்கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. பல்வேறு கோரிக்கைகளுக்குப் பின் குடிநீர் சப்ளை பெற வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. கூடுதல் கவனம் செலுத்தி சீராக குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறை பயன்பாட்டிற்கு கொண்டு வர அக்கிராமத்தினர் எதிர் பார்க்கின்றனர்.