ADDED : செப் 19, 2025 01:56 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் நெசவாளர்களுக்கு தரமில்லாத நுால்களை வழங்கும் கைத்தறி உதவி இயக்குனரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். ராஜகுரு, பால்ராஜ், வீராச்சாமி முன்னிலை வகித்தனர். இ.கம்யூ.,தேசிய குழு உறுப்பினர் ராமசாமி பேசினார்.
இதில் கைத்தறி உதவி இயக்குனரை கண்டித்தும், கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில குழு உறுப்பினர் லிங்கம் நகரச் செயலாளர் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.