ADDED : அக் 19, 2025 09:39 PM
சாத்துார்: சாத்துாரில் அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் திலீப் கண்ணன் தலைமையில் நடந்தது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக் கனி வரவேற்றார். முன்னாள் நகரச் செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சிவசாமி பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் ராமர், எம்.ஜி.ஆர் மன்றம் நகரச் செயலாளர் சங்கரநாராயணன், பூத் நிர்வாகிகள், கிளைச் செய லாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


