ADDED : செப் 18, 2025 06:28 AM
திருச்சுழி : திருச்சுழி அருகே பரளச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அமுல், ரிச் பிளஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய வேளாண்மை பயிற்சி முகாமிற்கு வங்கியின் மதுரை மண்டல உதவி பொது மேலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். நிறுவனங்களின் தலைவர் அசோக் சாரங்கன் முன்னிலை வகித்தார்.ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், சீட்ஸ் நிர்வாக இயக்குனர் பாண்டியன் பேசினார்.
வங்கியின் தலைமை அலுவலக முதன்மை மேலாளர் ரவி கிருஷ்ணமூர்த்தி, அருப்புக்கோட்டை மேலாளர் அழகர்சாமி , நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன், அலுவலர்கள் செய்தனர்.