/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரோடுகளில் உடைக்கும் பூசணிகளால் விபத்து அபாயம்ரோடுகளில் உடைக்கும் பூசணிகளால் விபத்து அபாயம்
ரோடுகளில் உடைக்கும் பூசணிகளால் விபத்து அபாயம்
ரோடுகளில் உடைக்கும் பூசணிகளால் விபத்து அபாயம்
ரோடுகளில் உடைக்கும் பூசணிகளால் விபத்து அபாயம்
ADDED : மே 30, 2025 03:12 AM

விருதுநகர்:
விருதுநகரில் கடைகளின் வணிக திருஷ்டிக்காக முச்சந்திகளான முக்கியரோடுகளில் உடைக்கப்படும் இது போன்ற பூசணிகளால் விபத்து அபாயம் அதிகரிக்கிறது.
மேலும் தற்போது மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்வதால் இரவு நேரங்களில் ரோடு வழுவழுப்பாக இருக்கும். இது போன்ற நேரங்களில் பூசணி உடைப்பது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கொரோனா நேரங்களில் இது போன்று உடைத்ததால் சென்னை போன்ற பெருநகரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. அதற்கு பின் பாதிப்பை கட்டுப்படுத்த தெருக்களில் உடைக்க கூடாது என தடைவிதிக்கப்பட்டது. பின் விபத்துக்கள் குறைந்தன. தற்போது விருதுநகரில் இதனால் பலர் சறுக்கி விழுந்து விபத்துக்களை சந்திக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.