/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாந்தோப்பு -- வையம்பட்டி ரோட்டில் குண்டாற்றின் குறுக்கே பாலம் தேவை மாந்தோப்பு -- வையம்பட்டி ரோட்டில் குண்டாற்றின் குறுக்கே பாலம் தேவை
மாந்தோப்பு -- வையம்பட்டி ரோட்டில் குண்டாற்றின் குறுக்கே பாலம் தேவை
மாந்தோப்பு -- வையம்பட்டி ரோட்டில் குண்டாற்றின் குறுக்கே பாலம் தேவை
மாந்தோப்பு -- வையம்பட்டி ரோட்டில் குண்டாற்றின் குறுக்கே பாலம் தேவை
ADDED : செப் 23, 2025 03:46 AM

காரியாபட்டி: மாந்தோப்பு வையம்பட்டி ரோட்டில் குண்டாற்றின் குறுக்கே பாலம் கட்டி, கண்மாய் கரையில் தார் ரோடு போடவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி மாந்தோப்பு ஊராட்சியில் பெரிய வையம்பட்டி 3. கி.மீ., தூரத்தில் உள்ளது. கண்மாய் கரையை ரோடாக பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் குறுக்கே குண்டாறு ஓடுகிறது. மாந்தோப்பு, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். மழை நேரங்களில் கண்மாய் கரையில் வாகனங்கள் செல்ல முடியாது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 20 கி. மீ., சுற்றிவர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
கண்மாய்கரையில் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விபத்து ஏற்படுவதற்கு முன், கண்மாய் கரையில் தார் ரோடு அமைத்து, குண்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
மழை காலம் துவங்கினால் வாகனங்கள் செல்ல முடியாது. கண்மாய் கரையில் தார் ரோடு அமைத்து, ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.