720 மது பாட்டில்கள் கார் பறிமுதல்
720 மது பாட்டில்கள் கார் பறிமுதல்
720 மது பாட்டில்கள் கார் பறிமுதல்
ADDED : செப் 19, 2025 01:59 AM
சாத்துார்: சாத்துார் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்திரகலா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு எட்டூர்வட்டம் டோல்கேட்டில் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த காரை போலீசார் நிறுத்திய போது நிற்காமல் சென்றது. போலீசார் காரை விரட்டி சென்ற போது அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதி தனியார் வாகன காப்பகத்தில் காரை நிறுத்தி விட்டு வந்தவர்கள் தப்பினார்.
போலீசார் காரை சோதனை செய்ததில் 480 குவாட்டர் பாட்டில்கள் 240 புல் பாட்டில்கள் வெளி மாநில மது இருப்பது தெரிய வந்தது.
காருடன் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். சாத்துார் மது விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.