/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நாய்க்கடியால் 30 பேர் காயம் உரிமையாளர் மீது வழக்கு நாய்க்கடியால் 30 பேர் காயம் உரிமையாளர் மீது வழக்கு
நாய்க்கடியால் 30 பேர் காயம் உரிமையாளர் மீது வழக்கு
நாய்க்கடியால் 30 பேர் காயம் உரிமையாளர் மீது வழக்கு
நாய்க்கடியால் 30 பேர் காயம் உரிமையாளர் மீது வழக்கு
ADDED : ஜூன் 26, 2025 12:44 AM
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் கடந்த 3 நாட்களாக வெறி நாய் ஒன்று ரோட்டில் நடந்து சென்றவர்களையும், மாடு, கன்றுகளையும் கடித்து காயப்படுத்தியது. இதில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட பால்ராஜ் புகாரில், நாய் உரிமையாளர் ஈஸ்வரன் மீது உரிய பாதுகாப்பின்றி நாய்வளர்த்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.