Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 4 ஆண்டுகளில் 13 ஆயிரம் விதை மாதிரிகள் சோதனை

4 ஆண்டுகளில் 13 ஆயிரம் விதை மாதிரிகள் சோதனை

4 ஆண்டுகளில் 13 ஆயிரம் விதை மாதிரிகள் சோதனை

4 ஆண்டுகளில் 13 ஆயிரம் விதை மாதிரிகள் சோதனை

ADDED : மே 21, 2025 06:23 AM


Google News
விருதுநகர்; மதுரை மண்டல விதை பரிசோதனை அலுவலர் மகாலட்சுமி, விருதுநகர் விதை பரிசோதனை நிலை மூத்த வேளாண் அலுவலர் சாய்லெட்சுமி சரண்யா ஆகியோரின் செய்திக்குறிப்பு: விதை சான்றளிப்பு, உயிர்ம சான்றளிப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் விதை பரிசோதனை நிலையம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் விதையின் தரத்தை துல்லியமாக பரிசோதித்து, விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கி வருகிறது. நெல், உளுந்து, சோளம், பாசிப்பயறு, குதிரைவாலி, நிலக்கடலை, எள், மக்காச்சோளம், பருத்தி, கீரை விதைகள், காய்கறி விதைகள் உள்ளிட்ட அனைத்து வகையான விதைகளின் முளைப்பு திறன், ஈரப்பதம், புறத்துாய்மை பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் சான்று விதை மாதிரிகள் 2497, ஆய்வாளர் மாதிரிகள் 8016, பணி விதை மாதிரிகள் 3136 மாதிரிகள் மொத்தமாக 13 ஆயிரத்து 649 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 805 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us