/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிசிடிவி கேமரா பொருத்தி கிராமத்தை கண்காணிக்கும் இளைஞர்கள் சிசிடிவி கேமரா பொருத்தி கிராமத்தை கண்காணிக்கும் இளைஞர்கள்
சிசிடிவி கேமரா பொருத்தி கிராமத்தை கண்காணிக்கும் இளைஞர்கள்
சிசிடிவி கேமரா பொருத்தி கிராமத்தை கண்காணிக்கும் இளைஞர்கள்
சிசிடிவி கேமரா பொருத்தி கிராமத்தை கண்காணிக்கும் இளைஞர்கள்
ADDED : ஜூலை 12, 2024 05:34 PM

நரிக்குடி:
குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கிராமத்தை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து அசத்திய இளைஞர்களை நரிக்குடி போலீசார் பாராட்டினர்.
நரிக்குடி பகுதியில் செயின் பறிப்பு, டூவீலர் திருட்டு, டாஸ்மாக் கொள்ளை, வழிப்பறி சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. மற்ற பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, தலைமறைவாக இருக்க இப்பகுதியை தேர்வு செய்கின்றனர். இது போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க நரிக்குடி பகுதியில் உள்ள ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை உள்ளது. குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து பிடித்து, தண்டனை பெற்றுத் தருவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனை அறிந்து போலீசாருக்கு உதவ நரிக்குடி எஸ்.வல்லக்குளம் இளைஞர்கள் முன் வந்தனர். ரூ. 50 ஆயிரம் வரை பணம் வசூல் செய்து, ஊரைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கிராமத்தை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து அசத்தினர். இனி அப்பகுதியில் யாரேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து, குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்து தண்டனை பெற்றுத் தர முடியும் என நம்புகின்றனர். இதனை அறிந்த நரிக்குடி இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் எஸ். வல்லக்குளம் கிராமத்து இளைஞர்களை பாராட்டினர்.