/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நிரந்தரமாக தொடர்ந்து இயங்குமா தாம்பரம் - கொச்சுவேலி ரயில்: இரு மாநில பயணிகள் எதிர்பார்ப்பு நிரந்தரமாக தொடர்ந்து இயங்குமா தாம்பரம் - கொச்சுவேலி ரயில்: இரு மாநில பயணிகள் எதிர்பார்ப்பு
நிரந்தரமாக தொடர்ந்து இயங்குமா தாம்பரம் - கொச்சுவேலி ரயில்: இரு மாநில பயணிகள் எதிர்பார்ப்பு
நிரந்தரமாக தொடர்ந்து இயங்குமா தாம்பரம் - கொச்சுவேலி ரயில்: இரு மாநில பயணிகள் எதிர்பார்ப்பு
நிரந்தரமாக தொடர்ந்து இயங்குமா தாம்பரம் - கொச்சுவேலி ரயில்: இரு மாநில பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 10, 2024 12:42 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழகம், கேரள பயணிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற தாம்பரம் - -கொச்சுவேலி ஏ.சி.,ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கோடை விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்ட ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்த நிலையால் பயணிகள் வசதிக்காக மே 16 முதல் ஜூன் 29 வரை வியாழன், சனிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு திருச்சி, மதுரை, விருதுநகர் தென்காசி, புனலுார், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு மறுநாள் மதியம் 1:40க்கு சென்றடையும் வகையிலும், மறு மார்க்கத்தில் மே 17 முதல் ஜூன் 30 வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மதியம் 3:35 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் திரும்ப பயணித்து மறுநாள் காலை 7:35 மணிக்கு தாம்பரம் சென்றடையும் வகையிலும், 14 ஏசி பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயில் இரு மாநில பயணிகளிடம் வரவேற்பை பெற்றது. ரயில் இயங்க துவங்கியது முதல் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. இந்தவழித்தடத்தில் இயக்கப்படும் கொல்லம், சிலம்பு, பொதிகை ரயில்களை விட அதிக வருவாயையும் தெற்கு ரயில்வேக்கு இந்த ரயில் பெற்று தந்தது.
இந்த ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். ரயில்வே நிர்வாகத்திற்கும் மனு அளித்துள்ளனர்.