ADDED : ஜூலை 05, 2024 11:05 PM
விருதுநகர்- விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது.
குழுமத் தலைவர் திருவேங்கட ராமானுஜதாஸ் தலைமை வகித்தார். அறங்காவலர் கோதையாண்டாள் குத்துவிளக்கு ஏற்றினார். துணை முதல்வர் பசுபதி வரவேற்றார். செயலாளர் வெங்கடேஷ் பேசினார். கல்லுாரி முதல்வர் கணேசன் பேசினார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் ஸ்டீபன் பொன்னையா பேசினார். மாணவர்களின் பரதநாட்டியம், சிலம்பம் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள் தொடர்ந்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.