/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டாசு ஆலை வெடி விபத்து சிவகாசி அருகே இருவர் பலி பட்டாசு ஆலை வெடி விபத்து சிவகாசி அருகே இருவர் பலி
பட்டாசு ஆலை வெடி விபத்து சிவகாசி அருகே இருவர் பலி
பட்டாசு ஆலை வெடி விபத்து சிவகாசி அருகே இருவர் பலி
பட்டாசு ஆலை வெடி விபத்து சிவகாசி அருகே இருவர் பலி
ADDED : ஜூலை 10, 2024 02:09 AM

சிவகாசி:சிவகாசி சோலை காலனியைச் சேர்ந்தவர் முருகவேல், 58. இவருக்கு, எம்.புதுப்பட்டி அருகே காளையார்குறிச்சியில், நாக்பூர் உரிமம் பெற்ற, 'சுப்ரீம்' என்ற பெயரிலான பட்டாசு ஆலை உள்ளது.
அதில், 108 அறைகள் உள்ளன. நேற்று காலை, 117 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். காலை 9:30 மணிக்கு பட்டாசு கலவை அறையிலிருந்து மருந்துகளை தள்ளுவண்டியில் எடுத்து, உற்பத்தி அறைக்கு தொழிலாளர்கள் இருவர் தள்ளிச் சென்றனர்.
அங்கு மருந்தை எடுத்து வைக்கும் போது, தவறி கீழே விழுந்ததில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறையில் இருந்த சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் 47, முத்து முருகன், 45, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், சரோஜா, 55, சங்கரவேல், 54, ஆகியோர் தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
ஆலையின் போர்மேன் ஓ.கோவில்பட்டியை சேர்ந்த குணசேகரன், மேலாளர் சிவகாசி பன்னீரை, எம்.புதுப்பட்டி போலீசார் கைது செய்தனர். ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
மருந்து கீழே விழுந்து வெடி சத்தம் கேட்டவுடன், மற்ற அறைகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர். இதனால், உயிர் சேதம் அதிகமாவது தவிர்க்கப்பட்டது.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு, தலா, இரண்டு லட்ச ரூபாயை நிவாரணமாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, பட்டாசு ஆலைகளில் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகள் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.