ADDED : ஜூன் 13, 2024 05:18 AM

விருதுநகர்: சங்கரன் கோவிலைச் சேர்ந்தவர் டிரைவர் ராஜசேகர் 40. இவர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக நேற்று மதியம் 3:30 மணிக்கு விருதுநகர் நான்கு வழிச்சாலைக்கு வந்தார்.
சிவகாசி செல்லும் ரோட்டின் நான்குவழிச்சாலை மேம்பாலத்தில் ஏறி இறங்கிய போது அருகே சென்ற டூவீலருக்கு வழி விடுவதற்காக லாரியை ஒதுக்கியதில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.