/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குடிநீர் மூலம் நோய் பரவலை தடுக்க பயிற்சி குடிநீர் மூலம் நோய் பரவலை தடுக்க பயிற்சி
குடிநீர் மூலம் நோய் பரவலை தடுக்க பயிற்சி
குடிநீர் மூலம் நோய் பரவலை தடுக்க பயிற்சி
குடிநீர் மூலம் நோய் பரவலை தடுக்க பயிற்சி
ADDED : ஜூலை 07, 2024 01:40 AM
நரிக்குடி: நரிக்குடியில் குடிநீர் மூலம் நோய் பரவுவதை தடுக்க ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நரிக்குடியில் 44 ஊராட்சி செயலர்கள், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு நோய் தடுப்பு விளக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பி.டி.ஓ., ஜெய புஷ்பம்,துணை பி.டி.ஓ., நேரு ஹரிதாஸ், வட்டார மருத்துவ அலுவலர் லஜா ஜெசிகா, சுகாதார மேற்பார்வையாளர் காந்தி, ஆய்வாளர்கள் மதன்குமார், கார்த்திக் குமார், வீரேந்திரன் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பருவ கால நோய் பரவலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.
நீர்த்தேக்க தொட்டியில் குளோரினேசன் செய்வது, தொட்டிகளுக்கு வரும் குழாய்கள், விநியோகம் செய்யப்படும் குழாய்களை அடிக்கடி கண்காணித்து, உடைப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். தேவையான அளவு ப்ளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு பவுடர் இருப்பு வைக்க வேண்டும். நீர் தேக்க தொட்டிகளை மூடி வைத்து பராமரிக்க வேண்டும்.
கொசு புழு உற்பத்தினை முற்றிலுமாக தடுப்பது குறித்து செய்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மழைக்காலங்களில் மக்கள் வசிப்பிடங்களில் நீர் தேங்காதபடி வடிகால் வசதி செய்து நோய் பரவுவதை தடுக்க வேண்டும்.