/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வேளாண் முன்னேற்ற குழுவிற்கு பயிற்சி வேளாண் முன்னேற்ற குழுவிற்கு பயிற்சி
வேளாண் முன்னேற்ற குழுவிற்கு பயிற்சி
வேளாண் முன்னேற்ற குழுவிற்கு பயிற்சி
வேளாண் முன்னேற்ற குழுவிற்கு பயிற்சி
ADDED : ஜூன் 22, 2024 04:39 AM
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே கோபாலபுரத்தில் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் வேளாண் முன்னேற்ற குழுவிற்கு பயிற்சி வழங்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் திருமலைசாமி தலைமை வகித்தார். வேளாண் குழுவின் செயல்பாடுகள், வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், 50 சதவீதம் மானிய விலையில் நுண்ணுாட்ட உயிர் உரங்கள், நோய் கட்டுப்பாட்டு காரணிகள் குறித்து வேளாண் குழுவை சேர்ந்த விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சி துறை, வேளாண் வணிகம் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த வாய்ப்புகளுக்கான சந்தேகங்களுக்கு விடையளித்தனர். ஏற்பாடுகளை உதவி அலுவலர் வனஜா செய்திருந்தார்.