/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சாத்துார் மெயின் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் சாத்துார் மெயின் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
சாத்துார் மெயின் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
சாத்துார் மெயின் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
சாத்துார் மெயின் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 09, 2024 05:20 AM

சாத்துார், : சாத்துார் மெயின் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவில்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நபர்களின் இருசக்கர வாகனம் கார் , ஆம்புலன்ஸ்கள் ரோட்டிலேயே நிறுத்தப்படுகின்றன.
மேலும் இந்தப் பகுதியில் மழை நீர் வடிகால் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இதற்காக பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. பள்ளம் தோண்டுவதற்காகவும் கான்கிரீட் கலவை போடுவதற்காகவும் இயந்திரங்கள் இந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் இந்தப் பகுதியில் ரோடு ஓரத்தில் வெங்காயம், பழங்கள் , விற்பனை செய்யும் லோடு வேன்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் ரோட்டின் அகலம் குறைந்து இருவழிச் சாலை ஒரு வழிச்சாலையாக மாறிவிட்டது.
இந்தப் பகுதியில் நடந்து செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. மேலும் கோவில்பட்டி நாகர்கோவில் செல்லும் பஸ்கள் , கனரக வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவழ்ந்து செல்லும் நிலை உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்ட போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து சென்ற மூதாட்டி ஒருவர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்படுவதையும் வியாபாரிகள் ரோட்டை ஆக்கிரமித்து உள்ளதையும் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் நாளுக்கு நாள் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதோடு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்தப் பகுதியில் கவனம் செலுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் டிராபிக் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.