/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ புகையிலை, கஞ்சா: 693 பேர் மீது வழக்கு புகையிலை, கஞ்சா: 693 பேர் மீது வழக்கு
புகையிலை, கஞ்சா: 693 பேர் மீது வழக்கு
புகையிலை, கஞ்சா: 693 பேர் மீது வழக்கு
புகையிலை, கஞ்சா: 693 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 14, 2024 04:21 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தடை புகையிலை விற்பனை செய்த 114 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, பொது இடத்தில் புகையிலை பயன்படுத்திய 629 பேர் மீது வழக்கு, ரூ. 1.11 லட்சம் அபராதம், கஞ்சா பதுக்கிய 64 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் அடங்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு போதைப் பொருள்கள் ஒழித்தல், தடுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
பள்ளிகளில் மாதத்தின் முதல் வெள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடக்கிறது. மது, போதை பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மேலும் போதைப் பொருள் தொடர்பான புகார்களை 94439 67578, 90427 38739 என்ற வாட்ஸ் ஆப் எண்களில் தெரிவிக்கலாம்.
மாவட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில் தடை புகையிலை விற்பனை செய்த 158 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 114 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகைபிடித்தல், புகையிலை விற்பனை, பயன்படுத்தியதாக கடந்து மூன்று மாதத்தில் 629 பேர் வழக்கு பதியப்பட்டு, ரூ. 1.11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதே போல கடந்த மூன்று மாதத்தில் கஞ்சா விற்பனை, பதுக்கி வைத்திருந்ததற்காக 64 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்த தினேஷ் குமார், குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.