/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குன்னுாரில் 20 நாளாக குடிநீர் இல்லை குன்னுாரில் 20 நாளாக குடிநீர் இல்லை
குன்னுாரில் 20 நாளாக குடிநீர் இல்லை
குன்னுாரில் 20 நாளாக குடிநீர் இல்லை
குன்னுாரில் 20 நாளாக குடிநீர் இல்லை
ADDED : ஜூன் 26, 2024 07:42 AM

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குன்னூர் ஊராட்சி 1வது வார்டு ராஜிவ் காலனியில் 20 நாட்களாக முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.
மேலும் அடிப்படை வசதிகள் செய்தி தருவதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதை கண்டித்து நேற்று காலை 10:45 மணிக்கு அப்பகுதி மக்கள் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, காலி குடங்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் சப்ளை செய்யவும், போதிய அடிப்படை வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் கலைந்து சென்றனர்.