/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வாறுகால், குடிநீர் வசதி இல்லை, நாய்களால் தொல்லை விருதுநகர் இ.பி., காலனி மக்கள் அவதி வாறுகால், குடிநீர் வசதி இல்லை, நாய்களால் தொல்லை விருதுநகர் இ.பி., காலனி மக்கள் அவதி
வாறுகால், குடிநீர் வசதி இல்லை, நாய்களால் தொல்லை விருதுநகர் இ.பி., காலனி மக்கள் அவதி
வாறுகால், குடிநீர் வசதி இல்லை, நாய்களால் தொல்லை விருதுநகர் இ.பி., காலனி மக்கள் அவதி
வாறுகால், குடிநீர் வசதி இல்லை, நாய்களால் தொல்லை விருதுநகர் இ.பி., காலனி மக்கள் அவதி
ADDED : ஜூலை 15, 2024 05:04 AM

விருதுநகர், : வாறுகால், குடிநீர் வசதிகள் இல்லை, முட்புதர்கள் நிறைந்து விஷப்பூச்சிகள் நடமாட்டம், நாய்கள் தொல்லை அதிகரிப்பு என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டி இ.பி., காலனி மக்கள்.
விருதுநகர் அருகே சத்திரரெட்டியப்பட்டி ஊராட்சியில் உள்ள இ.பி., காலனி பகுதியில் 20 ஆண்டுகளாக வாறுகால் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகே உள்ள காலிமனைகளில் சென்று தேங்கும் நிலை உள்ளது.
மழைக்காலத்தில் மழை நீர், கழிவு நீருடன் மனைகளில் தேங்கி துார்நாற்றம் வீசுகிறது. மேலும் காலி நிலங்களில் முட்புதர்கள் வளர்ந்து நிறைந்து இருப்பதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இவை அடிக்கடி வீடுகளுக்குள் வருவதால் மக்கள் அச்சத்துடன் வசிக்க வேண்டியுள்ளது.
தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களை துாரத்துகின்றன. இப்பகுதியில் உள்ள குறுக்குத் தெருக்களுக்கு முறையான ரோடுகள் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் வசிக்கும் வயதானவர்களை அவசர காலத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனங்களை கொண்டுவர முடியாத நிலை நீடிக்கிறது.
ஜல் ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் மாதத்திற்கு இருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. வீடுகளில் சேரும் குப்பையை கொட்டுவதற்கு கூட போதுமான குப்பைத் தொட்டிகள் இல்லை.
மின் கம்பங்கள் பல சேதமாகியுள்ளன. மின் விளக்குகளும் போதவில்லை. இரவில் இருள் சூழ்ந்துள்ளது. எனவே குடியிருப்புகளுக்கு அருகே சேதமாகியுள்ள மின் கம்பங்களை சீரமைத்து, புதிய மின் விளக்குகளை பொருத்த வேண்டும்.
- அழகு சுந்தரம், பள்ளி முதல்வர் ஓய்வு.
நான்கு வழிச்சாலை ஓரமாக செல்லும் நீர்வரத்து ஓடைகளை மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழைக் காலத்தில் மழை நீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது. எனவே இ.பி., காலனி வழியாக செல்லும் நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- போஸ், அரசு போக்குவரத்து கழகம் ஓய்வு.