/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரோடு ஓரத்தில் சாம்பல் குவியல் காற்றில் பறப்பதால் விபத்து அச்சம் ரோடு ஓரத்தில் சாம்பல் குவியல் காற்றில் பறப்பதால் விபத்து அச்சம்
ரோடு ஓரத்தில் சாம்பல் குவியல் காற்றில் பறப்பதால் விபத்து அச்சம்
ரோடு ஓரத்தில் சாம்பல் குவியல் காற்றில் பறப்பதால் விபத்து அச்சம்
ரோடு ஓரத்தில் சாம்பல் குவியல் காற்றில் பறப்பதால் விபத்து அச்சம்
ADDED : ஜூன் 16, 2024 04:29 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே இருக்கன்குடி செல்லும் ரோடு ஓரங்களில் சாம்பல், நெல் அரைத்த கழிவுகளை கொட்டுவதால் அவைகள் காற்றில் பறந்து ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது.
அருப்புக்கோட்டை சுக்கிலநத்தம் வழியாக இருக்கன்குடி செல்லும் ரோடு உள்ளது.
இந்த ரோட்டில் தான் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த ரோடு வழியாக 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்வர். வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் இருக்கன்குடிக்கு செல்ல இந்த ரோட்டின் வழியாக மக்கள் அதிக அளவில் டூவீலர்களில் வந்து செல்வர்.
குப்பை கிடங்கிற்கு அருகில் உள்ள ரோட்டில் ஒரு பாலம் உள்ளது. இந்தப் பால பகுதியில் நகரில் உள்ள ரைஸ் மில்களின் சாம்பல், நெல் கழிவுகளை குவியல் குவியலாக கொட்டுகின்றனர்.
இந்த ரோடுகளின் வழியாக டூவீலர் ஓட்டிச் செல்பவர்களின் கண்களை காற்றில் பறந்து வரும் சாம்பல் கண்களை பதம் பார்க்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்து ஏற்படுகிறது.
ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள ரோடு பள்ளமாக மோசமான நிலையில் உள்ளது. இந்த ரோட்டில் வளைந்து நெளிந்து தான் செல்ல வேண்டி உள்ளது. இதில் காற்றில் பறக்கும் சாம்பல் தூசிகள் சிரமப்படுத்துகிறது. நகராட்சி குப்பை கிடங்கில் சாம்பல் குவியல்களை கொட்ட ரைஸ்மில் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.